தூத்துக்குடியில் நடைபெற்ற ஒரு விழாவில் பள்ளி மாணவர்களுக்கு கட்சி நிறத் துண்டுகளை அணிவித்ததாக மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத் மீது புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு த.வெ.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் பங்கேற்று, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கினார்.
விழா மாலை 5 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அமைச்சர் இரவு 9 மணியளவில் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் நான்கு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தாமதமாக வந்த பின்னர், சில பள்ளி மாணவர்களுக்கு த.வெ.க. கட்சிக்கொடியின் நிறங்களில் உள்ள துண்டுகளை அமைச்சர் அணிவித்ததாக கூறப்படுவது விமர்சனத்தை ஏற்படுத்தி, விவாதத்தைத் தூண்டியுள்ளது.





