ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து நாடுகளின் தலைவர்கள், பிரிட்டனில் இருந்து பிரிந்து செல்லும் நோக்கத்தை வெளிப்படுத்தும் கூட்டு பிரகடனத்தை இன்று வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று பகுதிகளும் தனித்தனி நாடுகளாக வகைப்படுத்தப்பட்டாலும், தற்போது பிரிட்டன் அரசியலமைப்பின் கீழ் செயல்பட்டு வருகின்றன. சமீப காலங்களில் பிரிவினை ஆதரிக்கும் கொள்கை கொண்ட கட்சிகள் இங்கு ஆட்சியிலும் அரசியல் செல்வாக்கிலும் முன்னிலை பெற்றுள்ளன.

வேல்ஸில் பிளெய்ட் சிம்ரு கட்சி மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஸ்காட்லாந்தில் எஸ்.என்.பி. மற்றும் வடக்கு அயர்லாந்தில் சின் பெயின் ஆகியவை முக்கிய அரசியல் சக்திகளாக உள்ளன.

இதன் பின்னணியில், மூன்று நாடுகளின் தலைவர்களும் வேல்ஸ் தலைநகர் கார்டிப் நகரில் இன்று நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று, பிரிட்டனில் இருந்து பிரிவது குறித்த பொது வாக்கெடுப்பு நடத்தும் உரிமையை கோரும் கூட்டு பிரகடனத்தில் கையெழுத்திட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் செய்தி கூறுகிறது.