பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள தமிழக முதல்வர் விஜய், அங்குள்ள ‘சில்வர் ஸ்டோன்’ மோட்டார் ரேஸ் மைதானத்தில் நடிகர் அஜித்தை சந்தித்தார்.
அஜித் பங்கேற்ற ‘லீ மேன்ஸ்’ கோப்பைக்கான கார் பந்தயத்தை முதல்வர் தொடங்கி வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவரும் சந்தித்து ஆரத்தழுவிய புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின.
இந்த சந்திப்பின்போது இருவரும் பரஸ்பரம் பரிசுகளை வழங்கி அன்பை பகிர்ந்துகொண்டனர். முதல்வர் விஜய், அஜித்துக்கு ரேஸிங் கார் மினியேச்சரை வழங்கி, அதில் “அன்பான சகோதரர் அஜித்” என குறிப்பிட்டு கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு பதிலாக அஜித், முதல்வர் விஜய்க்கு ஒரு ஹெல்மெட்டை பரிசளித்தார். இந்த பரிசு பரிமாற்றமும் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.





