ஹரியானா மாநிலம் குருகிராமில், இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை கார் துரத்திச் சென்று மோதியதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியுள்ளது. சம்பவத்தில் அந்த பெண் காயங்களுடன் உயிர் தப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடியோ வைரலானதைத் தொடர்ந்து பலரும் அதிர்ச்சியடைந்து, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பதிவுகளை வெளியிட்டனர். பெண்ணின் நிலை குறித்து தகவல் கேட்டு பலர் கருத்துகளையும் பகிர்ந்தனர்.
தன் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத அந்த பெண், போலீசில் புகார் அளிப்பதாக தெரிவித்தார்.
வீடியோ பரவிய பின்னர், கார் ஓட்டியதாக கூறப்படும் கல்யாண் பைன்ஸ்லா, ‘பைக் ஓட்டியவர் பெண் என்று தெரியாது; வேண்டுமென்றே மோதவில்லை’ என விளக்கம் அளித்துள்ளார்.





