சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜென்சி தலைமுறையினருக்கு “நாட்டை ஒருபோதும் விட்டுக்கொடுக்கக் கூடாது” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தினார்.
டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய அவர், படித்த இளைஞர்கள் தங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளை புரிந்து கொள்ளும் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்.
அந்த பொறுப்புடன், தங்கள் பகுதியிலும் சமூகத்திலும் தலைமைப் பண்புடன் நடந்து கொள்ளவும், பேசவும், தலைமை பொறுப்புகளை ஏற்கவும் அவர் கேட்டுக்கொண்டார். பொறுமையுடன் நல்ல முறையில் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
நாடு முதன்மையாக இருக்க வேண்டும்; நாடு நன்றாக இருந்தால்தான் அனைவரும் நன்றாக வாழ முடியும் என்று கூறிய நிர்மலா, பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற மாணவர்கள் நாட்டை முதன்மைப்படுத்தும் முயற்சிகளில் பங்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.





