மேற்காசியாவில் போர் சூழல் நிலவும் நிலையில், சவுதி அரேபியாவில் 1.10 கோடி டன் அளவிலான யுரேனியம் செறிந்த தாது கண்டுபிடிக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
ஆஸ்திரியாவின் வியன்னாவில் நடைபெற்ற சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) கூட்டத்தில் பங்கேற்ற சவுதி அரேபிய எரிசக்தித்துறை அமைச்சர் இளவரசர் அப்துல் அஜிஸ் பின் சல்மான் இந்த தகவலை வெளியிட்டார்.
அவரது விளக்கப்படி, மதினா பகுதியில் ‘ஜபல் சயீத்’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட புவியியல் ஆய்வில் யுரேனியம் கொண்ட தாது மட்டுமன்றி, பிற அரிய வகை கனிமங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
மேலும், ஒப்பந்தத்தின் அடிப்படையில் சவுதியின் சுரங்க நிறுவனம் மாடன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த எம்.பி. மெட்டீரியல்ஸ் இணைந்து, அரிய கனிமங்களை பிரித்தெடுக்கும் பணிகளை மேற்கொள்ள உள்ளன.





