தமிழக வெற்றிக்கழக (டிவிகே) தலைவர் விஜய்யின் தாக்கம் ஹிந்தி பேசும் மாநிலங்களிலும் காணப்படுவதாக அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு இந்தியாவுக்கு முன்னோடி மாநிலமாகத் தொடர வேண்டும் என்றும், தொழில் முதலீடுகள் அதிகமாக தமிழகத்துக்கு வர வேண்டும் என்றும், அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றும், சட்டம்-ஒழுங்கு பேணிக் காக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், மக்கள் விரும்பும் தலைவராகவும் அவர்களின் எண்ணங்களில் நிற்கும் முதல்வராகவும் விஜய் விளங்கி வருவதாக அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் “தூய்மையான ஆட்சி நடத்துவேன்” என்று துணிந்து கூறிய ஒரே தலைவர் விஜய்தான் என்றும் அவர் வலியுறுத்தினார்.
வட மாநிலங்களில் இருந்து வந்த சிலர், “உங்கள் முதல்வரைப் போல எங்களுக்கும் ஒருவர் வேண்டும்” என்று தன்னிடம் கூறியதாக அமைச்சர் தெரிவித்தார். அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு இதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்வதாகவும் அவர் கூறினார்.





