சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவையை போற்றும் வகையில் நடைபெறும் பிரசார இயக்கத்தில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ செய்தியில், “தேசமே முதன்மை” என்ற உறுதியுடன் பிரதமர் தொடர்ந்து ஆற்றி வரும் மக்கள் சேவையை நினைவுகூரும் நோக்கில் ‘சேவா சங்கல்ப் அபியான்’ என்ற பெயரில் இந்த பிரசாரம் நடைபெறுகிறது என்று தெரிவித்தார்.

அர்ப்பணிப்பு, சேவை மனப்பான்மை, சமூக நலன் ஆகியவற்றை மையமாகக் கொண்டு, நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் வழங்கி வரும் தலைமையையும் மக்கள் சேவையையும் இந்த இயக்கம் நினைவுபடுத்தும் என்றும் அவர் கூறினார்.

மேலும், “வளர்ச்சியடைந்த பாரதம்” என்ற இலக்கை நோக்கி, பிரதமரின் 25 ஆண்டுகால சேவைப் பயணத்தால் ஊக்கமடைந்து அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து செயல்பட வேண்டும் என எல்.முருகன் வலியுறுத்தினார்.