சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 60 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு கோர்டோபன் மாநிலத்தில் எல்-நஹூத் நகருக்கு அருகே அமைந்துள்ள ‘அல்-சாரா’ தங்கச் சுரங்கத்தில் நேற்று இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இடிபாடுகளில் பலர் சிக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு முழுவதும் சக தொழிலாளர்கள் தங்களிடம் இருந்த கருவிகளைப் பயன்படுத்தி மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இன்னும் பலர் கணக்கில் வராத நிலையில் இருப்பதாகவும், பாறை மற்றும் மண் அகற்ற கனரக இயந்திரங்கள் அவசியம் எனத் தப்பியவர்கள் கூறியதாகவும் தகவல் தெரிவிக்கிறது.
அந்தப் பகுதியில் சுரங்கங்கள் மிகவும் நெருக்கமாக அமைந்திருப்பதே அடுத்தடுத்து இடிந்து விழுவதற்குக் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், 2023 முதல் நீடிக்கும் உள்நாட்டுப் போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக வேறு வழியின்றி சுரங்கத் தொழிலில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.





