சென்னையில் செப் 17 அன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்துள்ளது.
இன்றைய விலையில் தங்கம் சவரன் ரூ.1,12,080-க்கும், கிராம் ரூ.55 குறைந்து ரூ.14,010-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களின் தாக்கத்தால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்க விலை ஏற்றத் தாழ்வுகளை சந்தித்து வருகிறது.
முன்னதாக செப் 15 அன்று ஆபரண தங்கம் கிராம் ரூ.14,040-க்கும், சவரன் ரூ.1,12,320-க்கும் விற்பனையானதாக தெரிவிக்கப்பட்டது. அன்றைய வெள்ளி விலை கிராமுக்கு ரூ.250 ஆக இருந்தது.
இன்றும் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.





