காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் இன்று (செப்.17) சிவகங்கையில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78.

சில தினங்களாக உடல்நலப் பிரச்னை காரணமாக அவர் சிகிச்சை பெற்று வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிகிச்சை பலனளிக்காத நிலையில், அவர் தனது இல்லத்தில் உயிரிழந்தார்.

மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 2013 முதல் 2014 வரை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சராக அவர் பணியாற்றினார்.

மேலும், 1999–2004 காலகட்டத்தில் சிவகங்கை மக்களவை உறுப்பினராகவும், 2004–2016 ஆண்டுகளில் ராஜ்யசபா உறுப்பினராகவும் இருந்துள்ளார். வழக்கறிஞராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.