சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அவர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை அறிக்கையின்படி, செப்டம்பர் 9 அன்று கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், பல்வேறு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு அவரது உடல்நிலையை நெருக்கமாக கண்காணித்து வருவதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
அறிக்கையில், வி.எஸ். பாபுவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், சிகிச்சைக்கு அவரது உடல் நல்ல ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.





