மஹாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டம் நிபாத் நகராட்சி அலுவலகத்தில், தெரு நாய் தொல்லை குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி சிவசேனா கட்சியினர் வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்தினர்.
புகார்களை கவனிக்காத அதிகாரிக்கு “பாடம் புகட்ட” நினைத்ததாக கூறப்படும் அவர்கள், இரண்டு நாய்களை மூட்டையில் கொண்டு வந்து நகராட்சி தலைமை அதிகாரியின் மேசையில் வைத்தனர். சம்பவத்தை நேரில் கண்ட அதிகாரி முகம் சுருங்கியதாக தெரிவிக்கப்பட்டது.
இணையத்தில் பரவும் வீடியோவில், அந்த இரண்டு நாய்களும் பைல்கள் வைத்திருந்த இடத்தை நோக்கி சென்று சாதுவாக அமர்ந்துக் கொண்டதாக காணப்படுகிறது.
மேலும், நகராட்சி நிர்வாகம் இனியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஒட்டுமொத்த தெரு நாய்களையும் பிடித்து அலுவலகத்துக்குள் விடுவோம் என அவர்கள் எச்சரித்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் நகராட்சி ஊழியர்கள் பதற்றத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.





