மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் அக்.6 அன்று நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கான பிரசாரத்திற்காக, அதிமுக 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது.
அப்பட்டியலில் கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை பொதுச்செயலர் கே.பி. முனுசாமி, பொருளாளர் டி. சீனிவாசன் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
ஆனால், பழனிசாமி மீது அதிருப்தி காரணமாக தனி அணியாக செயல்படுவதாக கூறப்படும் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், சண்முகம் உள்ளிட்டோர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
இடைத்தேர்தலில் மனஸ்தாபங்களை மறந்து கட்சி வெற்றிக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என சில நிர்வாகிகள் கோரிக்கை வைத்திருந்த நிலையில், அதிருப்தியாளர்கள் மீண்டும் புறக்கணிக்கப்பட்டதாக வெளியான தகவல் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.





