சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனை, கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது நிலைமை சீராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மருத்துவமனை அறிக்கையின்படி, பல்வேறு மருத்துவத் துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு அவரை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறது.

வி.எஸ். பாபு, செப்.9 அன்று மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செப்.19 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், வழங்கப்படும் சிகிச்சைக்கு அவரது உடல்நிலை நல்ல ஒத்துழைப்பு அளிப்பதாகவும், தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை தெரிவித்தது.