மத்தியப் பிரதேசத்தில் வெள்ளநீர் பெருக்கெடுத்த நிலையில், ஒரு கார் வடிகாலில் விழுந்து அடித்து செல்லப்பட்டதில் 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அகர் மால்வா மாவட்டத்தில் இன்று (செப்.19) மழைநீரால் நிரம்பி வழிந்த வடிகாலில் கார் சிக்கியதாக கூறப்படுகிறது. டிரைவரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

நல்கேடா நகரில் உள்ள பாகுளமுகி கோவிலுக்கு அருகே இந்த சம்பவம் நடந்தது. ஒடிசாவிலிருந்து வந்த பக்தர்கள் பயணித்த கார், வெள்ளநீர் ஓடிய வடிகாலில் சிக்கி விபத்தில் மாட்டியதாக அதிகாரிகள் கூறினர்.

உள்ளூர் மக்களின் உதவியுடன் போலீசார் மீட்பு மற்றும் உடல் மீட்பு பணிகளை மேற்கொண்டு, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்படுகிறது.