கூட்டுறவு சங்கங்களில் பெற்ற பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருச்சி அருகே சமயபுரத்தில் விவசாயிகள் தொடர்ந்து 5வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பகுதி தள்ளுபடி போன்ற நடவடிக்கைகள் போதாது; முழுமையான கடன் தள்ளுபடியே தீர்வு என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அமைச்சர்கள் வினோத் மற்றும் ரமேஷ் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அந்த பேச்சுவார்த்தை முடிவின்றியே நிறைவடைந்தது.

பேச்சுவார்த்தையில் தெளிவான முடிவு எட்டப்படாததால், தங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.