15 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு வழங்கப்படும் பாஸ்போர்ட் விதிகளில் வெளியுறவுத்துறை மாற்றங்களை அறிவித்துள்ளது. இதனுடன் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய நடைமுறையின்படி, சிறார்களுக்கான சாதாரண 36 பக்க பாஸ்போர்ட் வழங்கப்பட்ட நாளிலிருந்து 5 ஆண்டுகள் அல்லது அந்த குழந்தை 18 வயது பூர்த்தி செய்யும் வரை மட்டுமே செல்லுபடியாகும். இதில் எது முன்பாக வருகிறதோ அதுவே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
உதாரணமாக, 10 வயதில் பாஸ்போர்ட் எடுத்தால் அது அடுத்த 5 ஆண்டுகள்—அதாவது 15 வயது வரை—செல்லும். ஆனால் 14 வயதில் எடுத்தால் முழு 5 ஆண்டுகள் கிடையாது; 18 வயது பூர்த்தியானவுடன் அந்த பாஸ்போர்ட் காலாவதியாகும்.
முன்னதாக, செல்லுபடித் காலம் 5 ஆண்டுகள் அல்லது 15 வயது வரை என்ற விதி இருந்தது. புதிய முறையால் குழந்தைகளின் பாஸ்போர்ட்டை அடிக்கடி புதுப்பிக்க வேண்டிய அவசியம் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சிறார்களுக்கான சாதாரண 36 பக்க பாஸ்போர்ட் கட்டணம் ரூ.1,000 இருந்து ரூ.1,775 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ‘தத்கால்’ பாஸ்போர்ட் கட்டணம் ரூ.3,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.





