சமீபத்தில் நடந்து முடிந்த ஸ்வீடன் பார்லிமென்ட் தேர்தலில் பசுமைக் கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிலா (41) வெற்றி பெற்று பார்லி. உறுப்பினராகத் தேர்வானார்.
அவர் வணிகப் பள்ளியில் பொருளாதாரம் மற்றும் சட்டம் பயின்று இளங்கலைப் பட்டமும் எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளதாக செய்தி தெரிவிக்கிறது.
மஹாராஷ்டிரா கல்வியாளர் அசோக் விகே பாட்டீலின் மகளான நிலா, முன்னாள் மத்திய அமைச்சர் பாலாசாகேப் விகே பாட்டீலின் பேத்தி. மேலும் மஹாராஷ்டிரா மாநில அமைச்சர் ராதாகிருஷ்ண விகே பாட்டீலின் மருமகளாகவும் உள்ளார்.
ஸ்வீடன் அரசியலில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அவர், பிரதமர் அலுவலகத்தில் ஆலோசகராக பணியாற்றியபோது நிதி, வரிவிதிப்பு மற்றும் வீட்டுவசதி தொடர்பான பிரச்னைகளை கையாண்டதாக கூறப்படுகிறது.
மேலும் அவரது குடும்பம் மஹாராஷ்டிராவின் அரசியல் மற்றும் கல்வித்துறைகளுடன் நீண்ட காலமாக தொடர்புடையதாகவும், அவரது தாத்தா விகே பாட்டீல் ஆசியாவின் முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலையை நிறுவியதாகவும் செய்தி குறிப்பிடுகிறது.





