ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் துப்பாக்கிச்சுடும் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச்சுடும் போட்டியில் இந்திய வீராங்கனைகள் சோனம் உத்தம் மஸ்கர், இளவேனில் வாலறிவன் மற்றும் விதர்சா கே வினோத் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த சாதனை அவர்களின் கடின உழைப்பும், கூட்டு முயற்சியும் பலனளித்ததைக் காட்டுகிறது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
மேலும், இந்த வெற்றி எதிர்வரும் காலங்களில் பல விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் என்றும் அவர் கூறினார்.





