புதுடில்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் வழக்கை டில்லி உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.
இந்திய குடியுரிமை பெற்றதிலிருந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைவதற்கு முன்பே அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
அந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம், சோனியா ஆவணங்களை போலியாகத் தயாரித்ததாக நிரூபிக்கும் போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டில், டில்லி புலனாய்வு அதிகாரிகளுக்கு தேவையான அவகாசம் வழங்காமல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததாகக் குறிப்பிட்டு, வழக்கை மீண்டும் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கு மீண்டும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கே மாற்றி அனுப்பப்பட்டுள்ளதுடன், வரும் 29ம் தேதி புதிய விசாரணைக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.





