மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் செப். 17 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, பக்தர்கள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் இலவச தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
பொதுவாக கோவிலுக்குள் மொபைல் போன் கொண்டு செல்லத் தடை உள்ள நிலையில், கும்பாபிஷேகத்துக்குப் பிந்தைய கூட்டத்தை கருத்தில் கொண்டு பக்தர்களின் வசதிக்காக சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சூழலில், சில பக்தர்கள் அம்மன் மற்றும் சுவாமி மூலஸ்தானப் பகுதிகளை மொபைல் போனில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இது கோவில் நிர்வாகத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தடையை மீறி மூலஸ்தானக் காட்சிகள் எவ்வாறு பதிவு செய்யப்பட்டு வெளியே பகிரப்பட்டன என்பது குறித்து கோவில் நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.





