சென்னை எம்எல்ஏ விடுதிக்குள் இயங்கும் நாச்சியப்பா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

ஆய்வின்போது சில உணவுப் பொருட்களில் காலாவதி தேதி குறிப்பிடப்படாமல் இருந்ததாகவும், உணவகம் முழுவதும் சுகாதாரமற்ற நிலையில் பராமரிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையிலான குழு செப்.20 அன்று ஆய்வு செய்தது. அப்போது பன்னீர், டீத்தூள் உள்ளிட்ட மாதிரிகள் மற்றும் பிற உணவு மாதிரிகள் எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன.

கண்டறியப்பட்ட குறைபாடுகள் சரிசெய்யப்படும் வரை உணவகத்தை நடத்தக்கூடாது என நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன், ஆயிரம்விளக்கு தொகுதி எம்எல்ஏவும் சபாநாயகருமான பிரபாகர், திருவல்லிக்கேணியில் உள்ள எம்எல்ஏ விடுதி உணவகத்தை ஆய்வு செய்து சுகாதாரக் குறைகளை சரி செய்ய உத்தரவிட்டிருந்தார்.