அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஸ்டார்பக்ஸ் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திட்டுள்ளது. இந்த நிகழ்வு முதல்வர் விஜய் முன்னிலையில் நடைபெற்றது.
அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனம் சென்னையில் உலகளாவிய திறன் மையம் (Global Capability Centre) அமைக்க உள்ளது. இதன் மூலம் சுமார் 800 தொழில்நுட்ப நிபுணர்களுக்கு உயர் ஊதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் தனது திறன் மையத்தை நிறுவ ஸ்டார்பக்ஸ் முன்வந்துள்ளதாக அரசு குறிப்பிட்டுள்ளது.





