மும்பையில் உள்ள ஜே.டபிள்யூ. மரியட் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வெளிநாட்டு நண்பர்களுடன் உணவருந்த சென்ற பிரபல இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் அசோக் சேத், எதிர்பாராத அனுபவம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
தன் சமூக வலைதள பதிவில், உணவருந்தத் தயாரான தருணத்தில் மேசையில் இருந்த உணவு தட்டுகளுக்கு இடையில் கரப்பான் பூச்சி இருப்பதை கண்டதாகவும், அதனால் கடும் அதிர்ச்சி ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், அந்த “குட்டி கரப்பான்” டின்னரை பகிர்ந்து கொள்ள வந்தது போல இருந்ததாக நகைச்சுவையாக குறிப்பிட்டு, பாஸ்தாவை விட பீட்சா தான் அதற்கு பிடித்திருக்கலாம் என்றும் அவர் எழுதியுள்ளார்.
கரப்பானை கண்டதும் பசி போய்விட்டதாகவும், டின்னரை முடிக்காமல் வெளியேறியதாகவும் தெரிவித்த சேத், உணவு மற்றும் மருந்து நிர்வாக (எஃப்.டி.ஏ.) கமிஷனரான துக்காராம் முண்டேவை டேக் செய்து, இது கவனிக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.





