உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்குள் இளம் ஆசிரியையொருவர் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தகவலின்படி, ‘சில்ட்ரன்ஸ் அகாடமி’ என்ற தனியார் பள்ளியில் 26 வயதான நிஷாத் பாத்திமா ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

அவரை முன்னாள் காதலன் பள்ளியின் மேல்மாடிக்கு அழைத்து சென்று தாக்கி கொன்றதாக கூறப்படுகிறது. இந்த கொடூரம் மாணவர்கள் கண்முன்னே நடந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சிசிடிவி காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி, கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பு குறித்த கவலைகளையும் அதிகரித்துள்ளது.