ஸ்ரீரங்கம் கோவில் நில மோசடி விவகாரத்தில் விசாரணை தொடங்கியுள்ளதாகவும், கோவில் நிலத்தை அபகரித்தவர்கள் யாராக இருந்தாலும் தப்ப விடமாட்டோம் என்றும் ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விவகாரத்தை துறை ரீதியாக ஆய்வு செய்து வருவதாகவும், விசாரணை முடிவுகளின் அடிப்படையில் அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறினார்.
மேலும், புகார் பொய்யானது என்றால் திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு ஏன் முன்ஜாமின் பெற்றார் என கேள்வி எழுப்பினார். உடனடி கைது எதுவும் இல்லை என்றும், நீதிமன்றத்தில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பதே சரியான நடைமுறை என்றும் அவர் தெரிவித்தார்.
விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் முன்ஜாமின் தேடுவது பயத்தை காட்டுகிறது என்றும், எங்கு தவறு இருக்கிறதோ அங்கு அச்சம் இருக்கும் என்பதையே இது வெளிப்படுத்துகிறது என்றும் அமைச்சர் ரமேஷ் கூறினார்.





