பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பாஜ அமைப்பு பொறுப்பாளர்கள் தொடர்பான புதிய நியமனங்களை அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, தமிழகத்திற்கு மேலிட பொறுப்பாளராக ராம் மாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக இணை பொறுப்பாளர்களாக நிர்மல் குமார் சுரானா மற்றும் டி.கே. அருணா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு கே. சுரேந்திரன் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆந்திராவுக்கு அரவிந்த் பதோரியா பொறுப்பாளராகவும், தமிழகத்தைச் சேர்ந்த வானதி சீனிவாசன் இணை பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தென் மாநிலங்களில் மற்ற நியமனங்களாக கர்நாடகாவுக்கு ஹரீஷ் திவேதி பொறுப்பாளராகவும், கேரளாவுக்கு எம். நாக்ராஜா பொறுப்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள இணை பொறுப்பாளராக வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார். தெலங்கானாவுக்கு சுனில் பன்சால் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல், பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் பொறுப்பாளர்கள் மற்றும் இணை பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பாஜ தெரிவித்துள்ளது.