சமீபத்தில் டைம் இதழ் உலகின் 50 செல்வாக்குமிக்க தொழில்நுட்பத் தலைவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. முக்கிய டிஜிட்டல் தளங்கள் மற்றும் ஏஐ நிறுவனங்களை வழிநடத்தும் நிர்வாகிகள் இதில் கவனம் பெற்றுள்ளனர்.
இந்த பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பலர் இடம்பெற்றுள்ளனர். ரெட்டிட்டின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி அமித் புண்டம்பேகர், ஓபன்ஏஐயின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி விஜயே ராஜி, ஆந்த்ரோபிக்கின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ராகுல் பாட்டீல், வால்மார்ட்டின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி சுரேஷ் குமார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இவர்கள் இந்தியாவின் புகழ்பெற்ற ஐஐடி நிறுவனங்களில் பட்டம் பெறாமல், தங்களின் திறமை மற்றும் செயல்திறன் மூலம் உயர்ந்த நிலையை எட்டியதாக செய்தி குறிப்பிடுகிறது. இதன் மூலம் ‘பட்டம்’ விட ‘திறமை’ முக்கியம் என்ற கருத்தும் வலுப்பெறுகிறது.
உயர் தொழில்நுட்பத் தலைமையிடங்களில் இந்திய வம்சாவளியினர் உலகளவில் தொடர்ந்து முன்னேறி வருவதற்கான ஒரு முக்கிய அடையாளமாக இந்தப் பட்டியலில் அவர்களின் இடம் பார்க்கப்படுகிறது.





