வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப், திட்டமிட்டு எதிர்மறை செய்திகளை வெளியிடுவதாகக் கூறி, சி.என்.என்., எம்.எஸ்.என்.பி.சி., பொலிடிகோ உள்ளிட்ட சில டிவி செய்தி நிறுவனங்களின் நிருபர்களுக்கான அனுமதியை சமீபத்தில் ரத்து செய்தார். இதன் மூலம் அந்த ஊடகங்களின் பத்திரிகையாளர்கள் வெள்ளை மாளிகைக்குள் நுழைவதற்கு தடையிடப்பட்டது.
இந்த கட்டுப்பாட்டைத் தொடர்ந்து, தடை விதிக்கப்பட்ட ஊடகங்கள் அதிபர் பங்கேற்கும் நிகழ்வுகளின் வீடியோ ஒளிபரப்பை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தன.
இதற்கு முக்கிய அச்சு ஊடகங்களும் புகைப்பட இதழியல் செய்தி நிறுவனங்களும் ஆதரவு தெரிவித்தன. அவைகளும் அதிபரின் நிகழ்வுகளை வெளியிடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில், வெள்ளை மாளிகை ‘டிரம்ப் டிவி’ என்ற பெயரில் புதிய சேனலை தொடங்கி, அதிபர் தொடர்பான நிகழ்ச்சிகளை அதில் ஒளிபரப்பத் தொடங்கியது.





