சென்னை: ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்திய ஆடவர் பாட்மிண்டன் அணி குழுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. அந்த அணியில் இடம்பெற்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
வெளியிட்ட அறிக்கையில், வெண்கலம் வென்று சாதனை படைத்த இந்திய ஆடவர் அணிக்கும், அணியில் இடம்பிடித்த ஹரிஹரனுக்கும் முதல்வர் தனது வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்தார்.
ஹரிஹரனின் திறமையை பாராட்டும் வகையில் தமிழக அரசின் சார்பில் இந்த உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் கூறினார். மேலும், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் “ELITE Sportsperson Scheme” திட்டத்தின் கீழ் ஹரிஹரன் நிதியுதவி பெற்றுவருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சாதனை தமிழக இளைஞர்களுக்கு பெரும் உத்வேகமாக அமையும் என்றும், விளையாட்டு வீரர்களின் கனவுகளுக்கு தமிழக அரசு தொடர்ந்து துணை நிற்கும் என்றும் முதல்வர் தெரிவித்தார். ஹரிஹரன் மேலும் பல உயரங்களைத் தொட வாழ்த்துகளையும் அவர் கூறினார்.





