இந்தியாவின் அதிக சொத்து மதிப்புடைய நபர்களின் 2026 பட்டியலை ஹுருன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி தொழிலதிபர் கவுதம் அதானி ரூ.9.22 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துடன் முதலிடத்தில் உள்ளார்.
ரூ.8.63 லட்சம் கோடி சொத்துடன் முகேஷ் அம்பானி இரண்டாம் இடத்தில் உள்ளார். மேலும் லஷ்மி மித்தல் (ரூ.3.39 லட்சம் கோடி) மற்றும் சைரஸ் பூனாவாலா (ரூ.3 லட்சம் கோடி) ஆகியோரும் முன்னணி நான்கு இடங்களில் இடம்பெற்றுள்ளனர்.
ஐந்தாம் இடத்தில் ரோஷினி நாடார் ரூ.2.78 லட்சம் கோடியுடன் உள்ளார். அவரைத் தொடர்ந்து குமார் மங்கலம் பிர்லா (ரூ.2.68 லட்சம் கோடி), திலிப் ஷங்கவி (ரூ.2.64 லட்சம் கோடி) மற்றும் அஸீம் பிரேம்ஜி (ரூ.2.62 லட்சம் கோடி) இடம் பெற்றுள்ளனர்.
ஒன்பதாம் இடத்தில் அனில் அகர்வால் ரூ.2.08 லட்சம் கோடியுடன் உள்ளார். பத்தாம் இடத்தில் சமீர் மேத்தா ரூ.1.89 லட்சம் கோடியுடன் இடம்பெற்றுள்ளார். இந்த சொத்து மதிப்பீட்டில் குடும்ப நிறுவனங்களின் பங்குகளும் சேர்க்கப்பட்டுள்ளதாக ஹுருன் தெரிவித்துள்ளது.





