ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா இதுவரை 15 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. இதில் 1 தங்கம், 6 வெள்ளி, 8 வெண்கலம் அடங்கும்.
அய்ச்சி–நகோயாவில் நடைபெறும் 20வது சீசன் போட்டிகளில், செப் 24 அன்று பெண்களுக்கான 60 கிலோ சான்டா (வுஷூ) இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை ரோஷிபினா தேவி களமிறங்கினார்.
இறுதிப்போட்டியில் சீன வீராங்கனையிடம் அவர் போராடி தோல்வியடைந்தாலும், இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை இந்தியாவுக்காக உறுதி செய்தார்.
தங்கம் தவறினாலும், ஆசிய விளையாட்டில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பதக்கம் வென்ற பெருமையை ரோஷிபினா பெற்றுள்ளார்.
மணிப்பூர் மாநிலம் பிஷ்ணுபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரோஷிபினா தேவி, விளையாட்டில் செய்த சாதனைகளுக்காக 2023ஆம் ஆண்டு அர்ஜூனா விருதைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





