ஆய்ச்சி–நகோயாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டில் ஆடவர் பாட்மிண்டன் அரையிறுதியில் சீனாவிடம் தோல்வியடைந்த இந்திய அணி, வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.
முதல் ஒற்றையர் போட்டியில் உலக தரவரிசை 14-வது இடத்தில் உள்ள லக்ஷயா சென், சீனாவின் ஷி யூவிடம் (உலக தரவரிசை 6) 16-21, 18-21 என தோற்றதால் இந்தியா 0-1 என பின்தங்கியது.
அடுத்த இரட்டையர் போட்டியில் முன்னணி ஜோடி சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி–சிராக் ஷெட்டி 21-11, 22-20 என வென்று கணக்கை 1-1 என சமன் செய்தது.
ஆனால், அடுத்த ஒற்றையரில் உலக தரவரிசை 20-வது இடத்தில் உள்ள ஆயுஷ் ஷெட்டி, லி ஷி பெங்கிடம் 19-21, 13-21 என தோல்வியடைந்தார். தொடர்ந்து நடந்த இரட்டையர் ஆட்டத்திலும் சீனா வெற்றி பெற்று, மொத்தமாக 3-1 என முன்னிலை பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்த வெண்கலத்தின் மூலம், 2023 ஆசிய விளையாட்டில் வெள்ளி பெற்றதற்குப் பிறகு தொடர்ந்து இரு ஆசிய விளையாட்டுகளில் பாட்மிண்டனில் இந்தியா பதக்கம் பெற்றுள்ளது. நடப்பு போட்டியில் இந்தியா 1 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்களுடன் 13-வது இடத்தில் உள்ளது.





