லண்டனில் இருந்து டில்லி நோக்கி சென்ற இண்டிகோ பயணிகள் விமானம், நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹீத்ரோ விமான நிலையத்திற்கே திரும்பி அவசரமாக தரையிறங்கியது.

ஹீத்ரோவில் இருந்து அட்டவணைப்படி புறப்பட்ட விமானம் டில்லி நோக்கி சென்று கொண்டிருந்தபோது, விமானத்தில் தொழில்நுட்பப் பிரச்சினை இருப்பதை விமானி கவனித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விமானம் திருப்பி விடப்பட்டு, சுமார் ஒன்றரை மணிநேரத்தில் ஹீத்ரோவில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

கோளாறின் தன்மை மற்றும் பயணிகள் தொடர்பான விவரங்கள் குறித்து இண்டிகோ நிர்வாகம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை என செய்தி கூறுகிறது.