புதுடில்லி: பொதுவாழ்வில் மக்களுக்குச் சேவை செய்வதே முதன்மை கடமையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பொதுவாழ்வில் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு, பாஜ சார்பில் ‘சேவா சங்கல்ப் அபியான்’ திட்டத்தின் ஒரு பகுதியாக இருசக்கர வாகன யாத்திரை செப்டம்பர் 17-ஆம் தேதி தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ், குஜராத்தின் வாட்நகரிலிருந்து வாரணாசி வரை 10 குழுக்களாக யாத்திரிகர்கள் மோட்டார் சைக்கிள்களில் பயணித்து வருகின்றனர். யாத்திரை பங்கேற்பாளர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாடினார்.

இந்த யாத்திரை அடித்தள மட்டத்தில் பொதுமக்களுடன் தொடர்பை வலுப்படுத்தவும், இளைஞர்களின் ஈடுபாட்டை ஊக்குவிக்கவும், சமூக நலன் மற்றும் கலாசார இணைப்புகளை மேம்படுத்தவும் நோக்கமென அவர் கூறினார்.