தமிழக சட்டசபையில் அமைச்சர்கள் அளிக்கும் உறுதிமொழிகள் உரிய காலவரம்புக்குள் நடைமுறைக்கு வருகிறதா என்பதை உறுதிமொழி குழு தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று சபாநாயகர் பிரபாகர் தெரிவித்தார்.

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதி வளாகத்தில் நடைபெற்ற உறுதிமொழி குழு கூட்டத்தை தொடக்கி வைத்து அவர் பேசினார். நிறைவேற்றப்படாமல் உள்ள உறுதிமொழிகள் குறித்து சட்டசபைக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஆய்வுப் பணிகளை நடுநிலையுடன், சட்டசபை நடைமுறைகளுக்கு உட்பட்டு, ஆக்கப்பூர்வமான அணுகுமுறையுடன் மேற்கொள்ள வேண்டும் என சபாநாயகர் அறிவுறுத்தினார்.

மேலும், சட்டசபைக்கும் அரசு நிர்வாகத்திற்கும் இடையே பாலமாக உறுதிமொழி குழு செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்த கூட்டம் குழுத் தலைவர் விஜய் சரவணன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.