சூரிய குடும்பத்தில் பூமிக்கு அடுத்ததாக உள்ள செவ்வாய் கோளில், ஒருகாலத்தில் உயிரினங்கள் வாழ ஏற்ற சூழல் இருந்ததா என்பதை விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகின்றனர்.

அமெரிக்காவின் நாசா 2020ஆம் ஆண்டு அனுப்பிய ‘பெர்சிவிரன்ஸ்’ ரோவர், 2021 முதல் செவ்வாய் தரைப்பரப்பில் உள்ள ‘ஜெஜீரோ கிரேட்டர்’ பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. பழங்கால உயிரினங்களின் தடயங்களைத் தேடுதல், மண் மற்றும் பாறைத் துகள்கள், புவியியல், காலநிலை ஆகியவற்றை ஆய்வு செய்வது இதன் முக்கிய பணிகளாகும்.

இந்த நிலையில், ஜெஜீரோ கிரேட்டர் பகுதியில் ஒருகாலத்தில் நீர் அலைகளும் ஏரிகளும் இருந்ததற்கான சான்றுகளை ரோவர் கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாயின் கடந்தகால சூழலை புரிந்துகொள்ளவும், அங்கு வாழ்வுக்கான சாத்தியங்கள் குறித்து தொடரும் ஆய்வுகளுக்கு வழிகாட்டவும் இத்தகைய கண்டுபிடிப்புகள் முக்கியமானதாக கருதப்படுகின்றன.