திருவண்ணாமலை திமுக எம்பி அண்ணாதுரை வீட்டில் வியாழக்கிழமை (செப் 25) லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிகாரிகள் சோதனை நடத்தினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேங்கிக்கால் பகுதியில் எம்பியுடன் தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. வேலூர் மற்றும் திருவண்ணாமலையில் இருந்து வந்த இரண்டு குழுக்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டன.
திமுக ஆட்சிக்காலத்தில் நெடுஞ்சாலைத்துறை மூலம் ஒப்பந்தங்கள் பெற்று பல்வேறு பணிகளை மேற்கொண்ட போது முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்துள்ளன.
மேலும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக உள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சோதனையின் முடிவுகள் குறித்து உடனடி தகவல் வெளியிடப்படவில்லை.





