கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து டிஜிட்டல் கட்டண செயலிகள் மூலம் லஞ்சம் பெறப்படுவதாக வந்த புகார்களின் அடிப்படையில், தாசில்தார் உள்ளிட்ட 5 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், செப்டம்பர் 22 அன்று பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர்.

சோதனையில் ₹4,600 ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜிபே மற்றும் போன்பே வழியாக மொத்தம் ₹6,84,221 அளவிலான யுபிஐ பரிவர்த்தனைகள் நடந்திருந்தது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தாசில்தார் சந்திரன், வருவாய் ஆய்வாளர்கள் விஜயலட்சுமி, ராஜலட்சுமி, டிரைவர் ராஜசேகர், அலுவலக உதவியாளர் வினோத்ராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.