‘ஜெம்’ வீரமணி விவகாரத்தில் தொடர்புடைய காவல் துறையினர் மீது கைது நடவடிக்கை வராமல் தடுக்க சில உயர் அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வழக்கு விசாரணை தற்போது தீவிரமடைந்து வருகிறது.
இந்த வழக்கில் காவல் அதிகாரிகள் மீது லஞ்ச குற்றச்சாட்டு தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. சில ஆதாரங்கள் இருந்தும் வீரமணி மீதான வழக்கை முன்கூட்டியே முடித்து வைத்ததாகக் கூறி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கைது செய்யப்படலாம் என்ற பேச்சும் உள்ளது.
காவல் துறையினர் கூறுவதன்படி, துறையில் பெறப்படும் புகார் மனுக்கள் முதலில் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்று பின்னர் விசாரணை அதிகாரிக்கு அனுப்பப்படும் நடைமுறை உள்ளது. அதேபோல் வீரமணி தொடர்பான புகார், சென்னை போலீசின் விபசார தடுப்பு பிரிவில் உதவி கமிஷனராக இருந்த யாஸ்மினிடம் சென்றதாக கூறப்படுகிறது. வழக்கு முன்னேற்றம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து, அவர்கள் அளித்த உத்தரவின் அடிப்படையிலேயே விசாரணை முடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் தற்போது மொத்த பொறுப்பும் யாஸ்மின் மீது சுமத்தப்படுவதாகவும், அவர் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. கைது நடவடிக்கை காவல் துறையின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை பாதிக்கக்கூடும்; மேலதிகாரிகளின் உத்தரவின்படி செயல்படும் கீழ்நிலை அதிகாரிகள் எதிர்காலத்தில் விசாரணை நடத்த தயங்கலாம் எனக் கூறி, சில ஐ.பி.எஸ். அதிகாரிகள் முதல்வர் விஜய்க்கு அறிக்கை அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.





