ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. அய்ச்சி–நகோயாவில் நடைபெற்ற ஆடவர் 10,000 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் குல்வீர் சிங் வெள்ளிப் பதக்கம் வென்று கவனம் ஈர்த்தார்.
குல்வீர் சிங் 28:29.38 நேரத்தில் பந்தய தூரத்தை கடந்தார். இதன் மூலம் இந்தியாவுக்கு இந்தப் போட்டிகளில் 9வது வெள்ளிப் பதக்கம் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் மகளிர் குண்டு எறிதல் போட்டியில் மன்பிரீத் கவுர் வெண்கலம் வென்றார். டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் மனுஷ் ஷா–தியா சிதலே ஜோடியும் வெண்கலப் பதக்கம் பெற்றது.
மகளிர் போல் வால்ட் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த பரணிகா இளங்கோவன் வெண்கலம் வென்று சாதனை படைத்தார். போல் வால்ட் பிரிவில் இந்தியாவுக்கு முதல் முறையாக பதக்கம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இதுவரை இந்தியா 2 தங்கம், 9 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 23 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 12வது இடத்தில் உள்ளது.





