மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) புதிய தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி மன்தீப் கே. பண்டாரியை மத்திய அரசு நியமித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிபிஎஸ்இயின் விடைத்தாள் மதிப்பீட்டுக்கான ‘ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்’ முறையைச் சுற்றி கடந்த ஜூன் மாதம் பெரும் சர்ச்சை எழுந்தது. விடைத்தாள் மறுமதிப்பீடு மற்றும் தேர்வு முடிவுகளில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, அப்போதைய தலைவர் ராகுல் சிங் மாற்றப்பட்டு, லோகண்டே பிரசாந்த் சீதாராம் இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
பண்டாரி பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் மருத்துவப் படிப்பை முடித்தவர். பின்னர் சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, 2001ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.
இதற்கு முன்பு, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநரின் முதன்மைச் செயலராக அவர் பணியாற்றியுள்ளார்.





