ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் விமானப்படை தளத்தில், 40க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் 2வது சர்வதேச விமானப் பயிற்சி ‘தரங் சக்தி’ சனிக்கிழமை தொடங்கியது.
இந்தப் பயிற்சியில் ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் முக்கிய விமானப் படைகள் கலந்து கொள்கின்றன. பிரான்ஸ் தரப்பில் ‘பெகாஸ் 26’ திட்டத்தின் கீழ் ரபேல் போர் விமானங்கள் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சி செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 12 வரை ஜோத்பூரில் நடைபெறுகிறது. இதில் அமெரிக்காவின் எப்-35 ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் எப்-16 போர் விமானங்கள் இடம்பெறுகின்றன.
மேலும் இந்திய விமானப்படையின் முன்னணி விமானங்களான ரபேல் மற்றும் சுகோய்-30 ஆகியவையும் இந்த பன்னாட்டு பயிற்சியில் ஈடுபட உள்ளன.





