மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் மனித வள நிறுவனம் நடத்தும் இந்தியர் நிஷாத் ஹூசேன், தனது ஊழியர்களுக்கு தலா ஒரு பரிசுப் பெட்டியை வழங்கிய நிகழ்வு வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

அந்த பரிசுப் பெட்டிகளில் ஆரம்பத்தில் வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. பாதி ஊழியர்களுக்கு ஐபோன் கிடைத்த நிலையில், மீதமுள்ளவர்களுக்கு சாக்லேட் மட்டும் கிடைத்தது.

இதையடுத்து அங்கு வந்த நிறுவன உரிமையாளரின் மனைவி ஹசீனா, சாக்லேட் பெற்றவர்களுக்கும் ஐபோன் வழங்கி, அனைவருக்கும் ஒரே மாதிரியான பரிசு கிடைக்கச் செய்தார்.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து பகிரப்பட்ட கருத்தில், ஊழியர்களின் அர்ப்பணிப்பு, நேர்மறை மனப்பான்மை மற்றும் கூட்டு வலிமை ஆகியவற்றிலிருந்தே உண்மையான வெற்றி கிடைக்கிறது என ஹசீனா தெரிவித்தார். முன்னேற்றப் பயணத்தில் ஒவ்வொரு முயற்சியும், யோசனையும், பங்களிப்பும் முக்கியம்; ஊழியர்களே நிறுவனத்தின் பலம் என்றும் அவர் கூறினார்.

இந்த செயலும், ஊழியர்களை முன்னிறுத்திய அந்த செய்தியும் சமூக வலைதளங்களில் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.