ஜப்பானின் அய்ச்சி–நகோயா நகரில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆண்கள் ஒற்றையர் ஸ்குவாஷ் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த அபய் சிங் இந்தியாவுக்காக வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இறுதிப் போட்டியில் மலேசியாவின் இங் இயான் யோவை எதிர்கொண்ட அபய் சிங் கடுமையாகப் போராடினாலும் தோல்வியடைந்தார். இதன் மூலம் அவர் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளியை கைப்பற்றினார்.

ஸ்குவாஷில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி கிடைத்தது. மகளிர் ஒற்றையர் இறுதியில் இந்திய இளம் வீராங்கனை அனஹத் சிங், மலேசியாவின் சிவசங்கரி சுப்ரமணியத்திடம் 0–3 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

இந்த முடிவுகளுடன் இந்தியாவின் மொத்த பதக்க எண்ணிக்கை 32 ஆக உள்ளது; தங்கம் 4, வெள்ளி 14, வெண்கலம் 14 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், முதல்வர் விஜய் எக்ஸ் தளத்தில் அபய் சிங்கிற்கு வாழ்த்து தெரிவித்து, அவரது சாதனையைப் பாராட்டும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த வெற்றி தமிழக இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு புதிய உத்வேகம் அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.