மேற்காசியாவில் போர் நிலவி வரும் சூழலில் உலகளாவிய எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டபோதும், இந்தியாவில் எரிபொருள் விநியோகம் தடையின்றி தொடர்ந்ததாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டினார்.

‘ஆசியா சொசைட்டி பாலிசி இன்ஸ்டிடியூட்’ நிகழ்ச்சியில் பேசிய அவர், போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியான கப்பல் போக்குவரத்து முடங்கியதால் பல நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதாக குறிப்பிட்டார்.

இத்தகைய சூழலிலும் இந்தியாவில் அதிகமான மக்களுக்கு எரிபொருள் கிடைக்கச் செய்ததாகவும், இதற்காக பிரதமர் மோடிக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேற்காசியாவில் கச்சா எண்ணெய் கொள்முதலில் சிக்கல் ஏற்பட்டபோது, வெனிசுலா, பிரேசில், நைஜீரியா போன்ற நாடுகளிலிருந்து இந்தியா கொள்முதலை அதிகரித்ததாகவும், ரஷ்யா உள்ளிட்ட பிற நாடுகளிலிருந்தும் இறக்குமதி தொடர்ந்ததாகவும் அல்பானீஸ் கூறினார்.

மேலும், கடந்த 11 ஆண்டுகளில் இந்தியா எரிபொருள் இறக்குமதி செய்யும் நாடுகளின் எண்ணிக்கையை 27 இலிருந்து 41 ஆக உயர்த்தியதன் மூலம், நாட்டு மக்களுக்கு தடையற்ற விநியோகம் சாத்தியமானதாக அவர் விளக்கினார்.