திருவனந்தபுரம் க்ரீன் பீல்டு சர்வதேச மைதானத்தில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி நல்ல ரன் வேகத்தில் ஸ்கோரை உயர்த்தியது.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் கில் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேம்ப்வெல், க்ரீவ்ஸ் தொடக்க வீரர்களாக களமிறங்கி உறுதியாக ஆடி அணிக்கு வேகமான தொடக்கத்தை வழங்கினர்.
அணி ஸ்கோர் 135-ஐ எட்டிய போது 62 ரன் எடுத்த கேம்ப்வெல், குல்தீப் சுழலில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து கார்ட்டி 13 ரன்னில் பிரசித் கிருஷ்ணா வேகப்பந்தில் வெளியேறினார்.
பின்னர் குல்தீப் மீண்டும் தாக்கி சாய் ஹோப்ஸ் (12), க்ரீவ்ஸ் (101) மற்றும் ஆன்ட்ரூ (0) ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். 43 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன் எடுத்திருந்தது.





