நேபாளத்தில் ஹிம்லுங் ஹிமால் மலைப்பகுதியின் அடிவார முகாமில் ஏற்பட்ட கடும் பனிச்சரிவில் சிக்கி குறைந்தது 10 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களைத் தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

திபெத் எல்லையை ஒட்டிய மனங் மாவட்டத்தில் அமைந்துள்ள ஹிம்லுங் ஹிமால் மலை 7,126 மீட்டர் உயரம் கொண்டது. பனிச்சரிவு இந்த மலைப்பகுதியின் அடிவார முகாமில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

காணாமல் போனவர்களில் மலையேற்ற வீரர்கள் மட்டுமல்லாமல் முகாமில் சமையல் பணியாளர்கள் உள்ளிட்ட உதவியாளர்களும் உள்ளனர். அவர்களின் நிலை குறித்து அதிகாரிகள் தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகின்றனர்.

நேபாள சுற்றுலாத்துறை மற்றும் மலையேற்ற முகமை அமைப்புகள் நிலைமையை கண்காணித்து தேடுதல் பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றன. ஆனால் மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகளில் தடைகள் நீடிக்கின்றன.