ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் திறந்திருந்த ஒரு மதுக்கடைக்குள் குரங்கு ஒன்று நுழைந்த சம்பவம், வித்தியாசமான காட்சியாக மாறி தற்போது இணையத்தில் பரவலாக பேசப்படுகிறது.
கடை ஊழியர்கள் பிஸ்கட் காட்டி அதை வெளியே அனுப்ப முயன்றாலும் குரங்கு வெளியே வரவில்லை. பின்னர் வரிசையாக அடுக்கி வைத்திருந்த மது பாட்டில்களை பார்த்து, ஒரு ‘குவார்ட்டர்’ பாட்டிலை மட்டும் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
பாட்டிலின் மூடியை பல்லால் கடித்து திறந்த குரங்கு, அதில் இருந்த மதுவை முழுவதும் குடித்ததாகவும், இதை பார்த்துக் கொண்டிருந்த ஊழியர்கள் என்ன செய்வதென தெரியாமல் நின்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிறிது நேரத்தில் போதை ஏறிய குரங்கு அதே இடத்தில் படுத்துக் கொண்டது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் குரங்கை கூண்டில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
மதுவால் குரங்கு ‘மட்டையானது’ என்ற செய்தி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.




